சிறு வயதில் என் பிறந்த நாள் எனக்குப் பிடித்ததில்லை;
வண்ண உடை சூடி வலம் வரும் நேரத்தில்
வெள்ளையுடை சூடி வலம் இடமிட்டு வருவேன்!
சுதந்திர தினத்தன்று பிறந்து வைத்ததால்
சிற்சில சலுகைகள் பறிபோனதாய் உணர்வேன்!
பக்கத்து பெட்டிக்கடையில் சாக்கலெட்டுகள் வாங்கி
பெட்டியில் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போனால்
பரேடு முடிந்தவுடன் பிடி மிட்டாயை என
பாராமலே பிள்ளைகளை விரட்டி விடுவார்கள்!
வருடம் சில கழிந்து வயதும் வளர்ந்தபின்
வாங்கி வந்த வரத்தை எண்ணி மகிழ்ந்து கொண்டேன்!
நாடு முழுதும் கொண்டாடும் நாளன்று பிறந்ததை
நினைத்து என் அன்னைக்கு நன்றி சொன்னேன்!
Ha ha.. good one Malu!
ReplyDelete