பூ ....
பூ என்றதும் என் மனதில் மண்வாசனை இன்று;
முதன் முதலில் நான் நட்ட நந்தியாவட்டை கன்று;
அதில் மெல்ல மொட்டு விட்ட முதல் அரும்பு;
மொட்டு வெடித்த மலரின் முகத்தில் மழலையின் குறும்பு!
ரோஜா அவள் என் பூக்களின் அரசி;
பத்து வண்ண வகைகளின் செவி உரசி
குசலம் விசாரித்துப் பின் கதை பேசி
பூக்க வக்கில்லையா என்று சிற்சமயம் ஏசிப்
பலநாள் பேசாதிருந்தால் வாசம், துளைக்கும் நாசி!
அம்மா தரும் கைக்காசில் மிச்சம் பிடித்து;
உண்டியல் உடைத்து போதாவிட்டால் உண்டி உடைத்து;
சிறுகச்சிறுக சிக்கனம் செய்து சேமித்து
'நர்சரி' சென்று வாங்கி வருவேன் செடி நாத்து!
செம்மண் கொணர்ந்து தொழுவுரம் கலந்து;
குளிர் நீர் தெளித்து அம்மண் பிசைந்து;
'தாய்' மண்ணுடன் என் பிள்ளையை எடுத்து
தொட்டியில் இறக்கியபின் கிடப்பேன் காத்து!
சில நாட்களில் வளர்ந்து விடும் அந்த நாத்து
போக வர சிரிக்கும் என்னைப் பார்த்து!
பரவசத்தை பெருக்கித் தரும் அதன் வித்து
இன்றும் சிலிர்க்கிறேன் என் பிஞ்சுப் பிள்ளைகளை நினைத்து!
Great di.. simply superb.. by any chance, do you have the old diary where you used to write all the poems? It also had the challenge poem - "minsara kambathin mel otrai kaagam', right? You might wanna get those all in here too!
ReplyDeleteHey jenthoo... thats exactly the plan! And the challenge poem will be my next post!
ReplyDeletelove it kanna ...hmmmm......nadathu nadathu....
ReplyDelete