அழுகை
பிறந்த நாள் முதலாக
இறக்கும் நாள் வரை;
கண்களில் ஆரம்பித்தது முதல்
கன்னங்களில் வழியும் வரை;
ஜனன ஒலியாக ஆரம்பித்து
மரண ஒலியாக முடியும் வரை;
உணர்ச்சிகள் துளிர்த்த நாள் முதல்
நினைவுகள் மங்கும் நாள் வரை;
பழகத் தெரிந்த நாள் முதல்
பிரிய நேரிட்ட நாள் வரை;
பசிக்கு அழுத நாள் முதல்
பிணியுடன் போரிட்ட நாள் வரை;
தன்மானம் வளர ஆரம்பித்த நாள் முதல்
சுய கெளரவம் தடுக்க ஆரம்பித்த நாள் வரை;
உணர்ச்சிகளின் வடிகாலாக,
துன்பத்தின் வடிகாலாக,
ஆனந்தத்தின் வடிகாலாக,
அவ்வப்போது ஜனிப்பது அழுகை!
Asatthal di.. keep writing!
ReplyDeleteIndha azhagiya azhugayai kannutra nodi mudhal , aanandha pravagayil janithadhum adhe yen "Azhugai" dhaan ! LOL
ReplyDeleteMal ! Excellent very proud of u da " ecsp. those lines Thanmaanam to suya gowrawam is very unique ! Keep going !- Chithi