Saturday, March 16, 2013

பிஞ்சு மனசு



பஞ்சு முட்டாய் வேணாம்ஒரு
பென்சில் லப்பர் போதும்
பர்பி காசு வேணாம்ரண்டு
பாட நோட்டு போதும்

சினிமா கொட்டாய் வேணாம்ஒரு
சிலேட்டு கொண்டா போதும்
சின்னதா அதில் கிறுக்க ரெண்டு
பலபம் கொண்டா போதும்

லட்டு திங்க வேணாம் லாலி
பாப்பும் கூட வேணாம்
லொங்கு லொங்குனு இஸ்கூல் போயி
படிச்சு வந்தா போதும்

தம்பி சுமக்க வேணாம்என்
பைய சுமந்தா போதும்
பாப்பா பாக்க வேணாம்என்
பள்ளிய பாத்தா போதும்

மேச சேரு வேணாம்
மண்ணு தரையிருந்தா போதும்
குண்டு பல்பு வேணாம்
குட்டி விளக்கிருந்தா போதும்

மச்சு வீட்டு புள்ளய போல
பச்ச சொக்கா வேணாம்
அது படிக்கும் பெரிய இஸ்கூலில்
ஒரு இடம் கிடைச்சா போதும்……

இதை நான் எழுதக் காரணமாய் அமைந்தது, இன்றைய ஹிந்துவில் வெளிவந்த  RTE தொடர்பான இந்தக் கட்டுரைதான். நம் தலையெழுத்து அவ்வளவுதான் என்று பெற்றோர் நொந்து கொண்டாலும், பெரிய பள்ளியில் படிக்கப் போவதாகக் கற்பனை கோட்டை கட்டி வைத்திருக்கும் அந்த எண்ணற்ற பிஞ்சு மனங்களின் ஏமாற்றத்திற்கு யார் பதில் சொல்வது?





8 comments:

  1. The poetry quite brilliantly packages the heaviness of the underlying social issue in a light-weight verse format and made for a poignant read!

    ReplyDelete
    Replies
    1. As usual, thanks Jayanth! In fact, can't thank you enough!

      Delete
  2. அருமையான கவிதை.மனதை கனக்கும்படி செய்து விட்டது.இந்த விஷயத்தில் எளிதில் தீர்வு காண முடியாது.காரணம் அரசு பள்ளிகளின் தரம் குறைவு தான்.தனியார் பள்ளிகளில் நல்ல தகுதியுள்ள ஆசிரியர்களை நல்ல சம்பளத்தில் தேர்ந்தெடுத்து பள்ளியும் முதல் இடங்களை கைப்பற்றுவதிலும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.அதற்கு அதிக பணம் தேவை.பள்ளி நடத்துபவர்கள் அதை ஒரு சேவையாக கருதுவதில்லை.அது ஒரு வியாபாரம்.
    அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதிலும்,நல்ல ஆசிரியர்களை அமர்த்துவதிலும் கவனம் தேவை. கண்காணிப்பும் மற்ற தனியார் பள்ளிகளுக்கு ஈடாக செயல் படுவதிலும் கவனம் தேவை. ஆனால் நடைமுறையில் அரசு பள்ளிகளின் செயல்பாடு மிகவும் வருந்தத்தக்க நிலையில் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் கேபி! அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் குறைவுதான். பல வருடங்களாக இந்த நிலைமை மாறாததால் அரசுப் பள்ளிகள் என்றாலே ஒரு வெறுப்புடன் பார்க்கும் நிலை இன்று உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், RTE ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. இதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால் அனைத்திலும் அவலமான விஷயம் என்னவெனில், எனக்குத் தெரிந்த பல பெற்றோர்களே தங்கள் பிள்ளை கீழ் தட்டு பிள்ளைகளுடன் படிப்பதை விரும்பவில்லை. ஆசிரியர்களும் அவ்வாறு இருப்பது மேலும் அதிர்ச்சியைத் தருகிறது. இங்கு பெங்களூரில், ஒரு பள்ளியில், இப்படி ஒதுக்கீடு மூலம் சேர்ந்த குழந்தகளை அடையாளம் காண அவர்கள் முடியைக் கத்தரித்து விட்டார்கள்! இப்படி அவலங்கள் நடந்தால், படிக்க வரும் பிள்ளைகள் கூட திரும்ப பள்ளியின் பக்கம் கூட ஒதுங்க மாட்டார்கள்!

      Delete
  3. அன்பு மாலினி வணக்கம்.
    நேற்று செய்தித் தாளில் லக்ஷ்மி என்ற சிறுமி ஒரு ஆங்கில மீடியம் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற தன் பிடிவாதத்தில் வெற்றி பெற்றாள் என்ற செய்தி படித்தேன். உங்கள் கவிதை எனக்கு அவளை நினைவு படுத்தியது.
    அவளே இந்தக் கவிதையை எழுதி இருப்பாளோ என்று தோன்றியது. இதைப் போல எத்தனை குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற துடிப்பில் இருக்கிறார்களோ!
    எல்லோருக்கும் கல்வி கிடைக்கட்டும்.
    அருமையான படைப்பு!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. என் வலைப்பூவுக்கு உங்களை வரவேற்கிறேன் ரஞ்சனி. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  4. Araup palligal yevvalavu mosamnaa, keezh thattu makkalum kashtappattu thaniyaar palligalukku kuzhandaigalai padikka anuppugiraargal. Arasup pallikkup ponaal kuzhandai kettu vidumnu solraanga!

    Aanaal ippa sila arasuppalligalil aangila medium aarambichchirukkaanga. Nallayirukkunnu solaraanga. Uniform, shoes, yellaam taraanga. Naan oru post pannen, 'Hindu'vil vanda inda news vaichchu.

    Kavadai unamaiyai solgiradhu, Malini! Very nice!

    ReplyDelete
    Replies
    1. Thanks Sandhya. I'll read that post of yours and comment.

      Delete