Wednesday, February 20, 2013

Minsaarak kambin mel ottrai kaagam

This was composed on 13th May 2001. My brother challenged me to write on a totally random topic, and presented this one! And I decided to take a stab at it....

மின்சாரக் கம்பின் மேல் ஒற்றைக் காகம்......

மின்சாரக் கம்பின் மேலே கருநிறக் காகம் ஒன்று
இரைந்து இரைந்து ஏனோ கரைந்து கொண்டிருக்க
இதைப் பார்த்த நானும் சற்றே வியந்து
அது கரைதற்குரிய காரணத்தைக் கற்பனை செய்தேன்!

இரையொன்று இசைந்தே வந்து அலகினில் சிக்க
அலட்சியத்தால் காக்கையும் அதைத் தவற விட
தன்னைத் தானே மிகச் சினந்தே தான்
தொண்டை வற்ற இவ்வாறு கத்துகிறதோ?

இணையோன்றை ஆசையுடன் அழைத்தே நிற்க
அதற்கோ இதனை அறவே பிடிக்காமல்
தன் காழ்ப்பை கடைக்கண்ணால் காட்டியமையால்
காகமும் கலங்கியே கண்ணீர் விடுதோ?

கருமை கொஞ்சம் கூடுதலாய்க் கொண்ட அக்காகம்
தன் நிறங்குன்றிய நிலையை எண்ணி நீர் சிந்தியதோ?

என்றோ மாண்ட தன் நண்பனை நினைத்து
நெஞ்சில் ஈரமிக்க காகம் நீர் வடிக்கிறதோ?

நித்திலத்தின் நிலையாமையை எண்ணி வருந்தியே
காகமும் தன்னைத்தானே நொந்து கொள்ளுதோ?




5 comments:

  1. ayyooooo...kaakaikul ivalavu sogamaa !

    ReplyDelete
  2. Maybe it's just mourning for all the tsunami victims and its helplessness being stuck in a damned electrical pole thousands of miles away!

    ReplyDelete
  3. wow nice thought... how abt adding this?

    seemaik kappal thavikkum sappaaniya sodararku
    sevai seyya vazhiyndri sirumaandhu pogudho?

    ReplyDelete
  4. Andha karu nira kaagam kuyilai paarthu...
    "kadavul nam iruvarin nirathaiyum ondraaga padaika,nam kuralil mattum yen indha paagu paadu...?!?!"
    endru thavithatho....!!!

    ReplyDelete