Showing posts with label education. Show all posts
Showing posts with label education. Show all posts

Saturday, March 16, 2013

பிஞ்சு மனசு



பஞ்சு முட்டாய் வேணாம்ஒரு
பென்சில் லப்பர் போதும்
பர்பி காசு வேணாம்ரண்டு
பாட நோட்டு போதும்

சினிமா கொட்டாய் வேணாம்ஒரு
சிலேட்டு கொண்டா போதும்
சின்னதா அதில் கிறுக்க ரெண்டு
பலபம் கொண்டா போதும்

லட்டு திங்க வேணாம் லாலி
பாப்பும் கூட வேணாம்
லொங்கு லொங்குனு இஸ்கூல் போயி
படிச்சு வந்தா போதும்

தம்பி சுமக்க வேணாம்என்
பைய சுமந்தா போதும்
பாப்பா பாக்க வேணாம்என்
பள்ளிய பாத்தா போதும்

மேச சேரு வேணாம்
மண்ணு தரையிருந்தா போதும்
குண்டு பல்பு வேணாம்
குட்டி விளக்கிருந்தா போதும்

மச்சு வீட்டு புள்ளய போல
பச்ச சொக்கா வேணாம்
அது படிக்கும் பெரிய இஸ்கூலில்
ஒரு இடம் கிடைச்சா போதும்……

இதை நான் எழுதக் காரணமாய் அமைந்தது, இன்றைய ஹிந்துவில் வெளிவந்த  RTE தொடர்பான இந்தக் கட்டுரைதான். நம் தலையெழுத்து அவ்வளவுதான் என்று பெற்றோர் நொந்து கொண்டாலும், பெரிய பள்ளியில் படிக்கப் போவதாகக் கற்பனை கோட்டை கட்டி வைத்திருக்கும் அந்த எண்ணற்ற பிஞ்சு மனங்களின் ஏமாற்றத்திற்கு யார் பதில் சொல்வது?