Thursday, February 28, 2013

THE DAILY STORY OF AN INDIAN NAARI - a practical analysis


(This is my entry to the IndusLadies 4th Annual International Women's day Contest. )

The daughter-in-law is crying.  Tadaaa!  Wanna know my fairness secret? CUT.

 Sheila happily gyrates, crooning all about her youthful glory. CUT..

Even Angels fall for Axe. CUT..

Munni laments about her loss of reputation. CUT.

Daughter-in-law resumes crying, as the apathetic mom-in-law bitches about her.

“Che, what horrible things they show on TV nowadays? Not even a minute can we watch with family, no?”, remarks my mother-in-law, not expecting any reply, as she settles down to watch the wailing ‘Bahu’, post the break time channel surfing session.

“They have to ban these ads, at least during family hours…”

“….”

 “These ladies, no shame, ready to do anything for money…Haiyo Rama”

“….”

10 AM - I am listening, but keeping mum. I am in the midst of my daily morning frenzy.  Oh yeah, nowadays, 10 AM, with the exam season and all that. Packed lunches, plasticized smiles, hurried hugs and off we are, to face the drudgeries of our own lives.  Oh, the plasticized one isn’t mine. After all I’m the mother! How can a mother...? Hmmm, well, it is the little boy. Exam tension, you see! And the man… as well. A big day at the office, it seems. I can feel the lack of pressure in the hug. It’s ok hon.
I have to wash dishes before I leave. The maid isn’t in today- she is in the hospital. Her husband is one angry drunkard chap. I should go and meet her.   

11 AM – I just reached office. I regret for having taken public transport today, despite my elevated fears after the recent incidents reported in media. That idiot groped me TWICE in a matter of 30 minutes. How dare he? Leave it. I need to start working NOW. A coffee will fix it.

11:30 AM - I’m still pointlessly staring into my monitor filled with some code, chat and FB windows. How could I forget? May be I AM getting old. NO WAY. I’ll definitely do it today. A knot in my hankie will help me remember.

1:00 PM –   I’ve finally finished coding that major feature. Now, it’s time to check on the status of the delegated work. Have to prepare for the important call with the UK client late evening.  I hope Rohit brings back his tiffinbox empty, and of course his tummy full, at least today. ‘He has nutrition deficiency’, his doctor says. Did I have any of that as a child? I should probably call Mama and find out.

1:15 PM – I’m lunching at my desk today.  I really have to go and visit Kaveri. I hope she is ok. Her husband hit her with an iron skillet, her daughter told me yesterday. That girl has just attained puberty and now has her own share of problems in the slum where she lives. Her father himself has tried getting cozy with her, she told me once.  I wonder why Kaveri is still married to that monster. Poor Rohit, he is really getting tired waiting for the tooth fairy. His permanent teeth have started popping out already. Before he develops a complex, I should take him to the dentist. Perhaps, an eye check-up too.

2:00 PM – I’ve gathered all the important points to be discussed in today’s call.  Why hasn’t he called me yet? Did the appraisal go well? I’m sure he’ll come home with sweets tonight. I’m not making Rohit dance to Rowdy Rathore song during his annual day. I have to talk to his teacher about this. Oh! To hell with today’s idea of entertainment.

3:00 PM – Rohit’s teacher just called. She asked me to pick him up. Poor thing, he’s running temperature.  What do I do? I just can’t walk up to my silly Romeo Doppelganger of a boss and talk about skipping the call.  I’m fed up of him and his lewd stares. I’ll ask mom-in-law to go with the driver to the school. Sorry Rohit baby!

4:00 PM – I just completed a mentoring session. Rohit has 101 degrees fever. Mom-in-law has given him Calpol. Hope it’s the correct dose.

5:00 PM – Hmm, a talk by the Biocon lady happening at the auditorium? How I wish I could go!  Oh, the call is at 5:15, I better prep up.

6:00 PM – Uff! Done with the call. Rohit, Mama’s coming darling.

6:30 PM – This darned bus! Hope Rohit’s fever has come down. I need to help Kaveri in some way, but how? Will she agree for a divorce? Should I, perhaps take her to ‘All women police station’? What if that goonda fellow targets us?

7:00 PM –  “Am back Rohit darling! Mummy’s gonna spend the rest of the day, just with you, ok?” I hear myself saying.

10:00 PM – Rohit is asleep. His is afebrile now. The knot in my hankie is now vying for my attention. I slowly untie it as I sit down with my laptop to key in my entry for a blogging contest. I am planning to visit Kaveri on my way to office tomorrow. Time for another knot in my hankie.
                                                                        -----------

     The story above may look just like a peek into our own daily lives, but there’s more to it. Reading between the lines, one may observe that the protagonist lady seems to be living in the ‘audience’ mode, rather than the ‘actor’ mode. Most of us exist in the audience mode, waiting for a story to be told, shed emotional tears, ponder, yet slowly but surely, get ripped away into yet another quotidian day.

     When I had to choose from a list of topics for this contest, I felt I had to touch upon many of them, as most of them seemed interconnected. A typical Indian woman has to face more than one of these problems on any given day. To elaborate, let’s consider scenarios from the above story:



  • The sleazy content in media : Today’s world is all about glitz and glamour. We all agree that ladies are portrayed in poor light. Should we go ahead and say that all actresses must put their foot down and say they will not appear in such commercials/endorsements? That, I’m afraid, will practically never happen. No one wants to stick out like a sore thumb. Especially a beautiful, popular woman, UNLESS, there is a reliable support system in place. A system which censors such content in the first place at least from the main stream media.  A system that has people who respect women for what they are, and not how their bodies are. A system that has strong laws for protecting women in the media, or any field for that matter.  Till then, but for a few activists, most women will succumb, just the way WE commoners do. We may never know, the divas may aggressively and anonymously be blogging about it somewhere in the cyberspace.
  • Motherhood: The protagonist, as we see, is struggling to achieve the ever-elusive ‘Work-life’ balance. Today’s mother certainly has more hats to juggle and more things to brood over. Again, a support system becomes mandatory for the woman to successfully carry out the balancing act – a good, understanding family consisting of the husband, children and both the partners’ parents. While, it may not exactly be necessary/possible to be living with the in-laws under the same roof, maintaining a cordial relationship with the extended family does help a woman in the long run. NO ONE can love your child the way your family does – not your maid, not your neighbor and definitely not your daycare ayah!
                           
                                                 

  •  Women’s safety: Should the protagonist have slapped the guy in the bus? Or showered abuse? Obviously not. Practically, no average Indian woman wants to hog the limelight even in a bus, because that sadly makes her more vulnerable to lewd remarks and comments. May be the lady in the story should have handed over the guy to the police?  Having read all the horror stories and humiliations against women happening in various police stations, (and even in their own houses by their own fathers and uncles) our leading lady probably decided against it. She feels, ‘Strengthen policing. Weaken moral policing’. Till then, she is reluctantly ready to wash away all the slime with a daily dose of Dettol.

Courtesy: Google image search
                   
  • Domestic Abuse: Any form of abuse is horrifying and that too happening under the license of marriage is definitely detrimental to all our womenfolk. This, I feel, is something that can be rectified provided the victim is strong willed. Our story captures the apprehensions of an average woman who wants to help a victim and that is totally understandable. This is where anonymity can help. If the lady can call a reliable establishment which can, for sure, help the victim through all the legal tussles, thereby protecting her and providing her a respectable means of livelihood, then no woman would hesitate helping a lady in distress. Such facilities do exist even today, but are dismally inadequate.
                 
    Courtesy: Google image search




  •  Women in Public life:  They are the role-models, no doubt. They are the people the average Indian women fantasize. Yet, considering the percentage of women quitting their careers to fully dedicate themselves to family commitments, I have to say the average Indian woman is yet to come of age. A speech here, a talk there, by successful women isn’t enough to get an average ‘naari’ all charged up. To really get inspired, change must happen at the grass roots level. Every rural and urban Indian woman must come to think that she is entitled to her desires and choices in life, that childbirth/motherhood are just episodes in her life, not the end. 
                             
    Courtesy: Google image search


  • Empowered women, increasing divorce rates? – Just consider the example of Kaveri. Shouldn’t she file for divorce from a monster of a husband, who is a drunkard, abuses her and even makes sexual advances with her own daughter? Millions of Kaveris have existed and continue to exist in our country, bearing all the torture and trauma in silence. If all these Kaveris get empowered with reliable social and judicial systems, the divorce rate will definitely rise, which will only do good for the woman and the society! And this is just one of the many legitimate reasons for divorce in rural and urban India. There are many more stories, lying there, unraveled. 

Courtesy: Google image search
                    
         All that said, I wish to end my post on a positive note. I feel blessed in more than one way. My education which has helped me refine my thought process and my freedom, as an Indian woman, to pen my thoughts and post the same in a public forum, underline the fact that my life is way better than many other women in the world. We do have a very long way to go, but I can say that we have embarked on that journey.


























Saturday, February 23, 2013

ஓரு பயணத்தில்....

ஓரு பயணத்தில்....


‘ஹலோ, எப்டி இருக்கேள்?.... நான் பச்சுல பொய்ண்டிருக்கேன். ஆங், ஹோசூர் தாண்டிடுத்து…..’
அந்த பலத்த குரல் என்னை ஆட்கொண்டிருந்த நித்திரா தேவியை ஓட ஓட விரட்டி அடித்தது. புதிதாய் வாங்கிய நாய்க்குட்டி முன்னிரவு படுத்திய பாட்டில் மிகவும் களைத்துப் போயிருந்த நான், கண்ணைத் திறக்க மனமின்றி அப்படியே சாய்ந்த வண்ணம் உட்கார்ந்திருந்தேன்.
‘டிஃபன் சாப்டாச்சா?.... ம்ம், கிரிஜா கையிலே இட்லி மொளகாப் பொடி பாக் பண்ணிக் குடுத்தா. எங்கேயானும் நிறுத்தறச்சே சாப்ட்டுக்கறேன்.’
இந்த மாமி என்ன சாப்பிட்டால் பச்சில் இருக்கறவங்களுக்கு என்ன? என்று நினைத்துக் கொண்டேன். குளிர் சாதனப் பேருந்து ஆதலால் வெளி சப்தங்கள் குறைந்து மாமியில் குரல் மேலோங்கிக் கேட்டது. தற்போது உறக்கம் முற்றிலுமாகக் கலைந்து விட்டது. கைப்பையில் இருந்த ஐ போடை தட்டிவிட்டு காதுகளில் மாட்டியிருக்கலாம் தான். ஆனால், இந்த ஃபேஸ்புக் காலத்தில் வர்ச்சுவல் ஆக வம்புக் கலையும் நமக்கு, ‘லைவ்’ வம்பு கசக்குமா என்ன?
‘கெளம்பரத்துக்கு முன்னாடி காபிப் பொடி தீர்ந்துடுத்து. அவளண்டை சொல்லி வரச்சே கொஞ்சம் அரைச்சுண்டு வரச் சொல்லுங்கோ’
‘அந்த அவள் யாராயிருக்கும்? மாமியின் பெண்ணா? இந்த மாமியே ‘ஆத்துக்கு’ போற வழியில் அரைச்சுண்டு போகக்கூடாதா? ஹ்ம்ம், மத்தவங்களை வேலை வாங்கறதுல ஒண்ணும் கொறைச்சல் இல்ல’ – இது என் எண்ணம். என் நித்திரையைக் கலைத்த மாமியைக் கொஞ்சம் ராட்சசி மாமியாகக் கற்பனை செய்தேன். சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டேன்.
சிற்றுண்டிக்காக பேருந்து ஒரு உயர் ரக உணவு வளாகத்தில் நின்றது. நின்றதுதான் தாமதம், மாமி இட்லி டப்பாவைத் திறந்தாள். மிளகாய்ப்பொடியுடன் நல்லெண்ணை கலந்த வாசம் நாசியைத் துளைத்தது. மாமி இட்லியைப் பிட்டு சாப்பிட ஆரம்பித்தாள். பேருந்தில் கொடுத்த தண்ணீர் பாட்டிலையும் அருகில் வைத்துக் கொண்டாள்.
நான் பேருந்தை விட்டுக் கீழே இறங்கினேன். ‘மேக்டொனால்ட்’ இன் உரளைகிழங்கு வறுவல் வாசமும், ஐயர் பவனின் தோசை மற்றும் ஃபில்டர் காபி மணமும், கோஃபீ டே வின் ‘கேப்புசினோ’ வாசமும் காற்றில் கலந்து வந்து மூளையைக் குழப்பின. இறுதியில் தமிழகம் வென்றது. ஐயர் பவனுக்குள் நுழைந்து இட்லி காபி ஆர்டர் செய்தேன்.
தனியே ஹோட்டலில் நுழைந்து டிஃபன் ஆர்டர் செய்யும் பெண்ணை சர்வர்கள் சற்று வித்தியாசமாகப் பார்த்தார்கள். ம்க்டொனல்டிலொ, கோஃபீ டே விலோ இந்த விழி அம்புகளைத் தவிர்த்திருக்கலாம். பரவாயில்லை. மாமி தூக்கத்தைக் கலைத்ததால், தலைவலி வேறு வந்துவிட்டது. இதற்கு மருந்து ஃபில்டர் காபிதான். கேப்புசினோ இல்லை.
உண்டி முடித்து விட்டு மீண்டும் பச்சில் ஏறிக் கொண்டேன். மாமி இட்லியைக் கபளீகரம் செய்து முடித்திருந்தாள். ஏசி பச்சாதலால் ஜன்னலைத் திறந்து கை கழுவ முடியவில்லை. ‘கிரிஜா’ கொடுத்திருந்த டிச்சுச் நல்லெண்ணைப் பிசுக்கைப் போக்குவதில் தோல்வி அடைந்திருந்தன போலும். தவித்துக் கொண்டிருந்தாள்.
‘மாமி, வெளியே, டஸ்ட்பின், வாஷ் ஏரியா இருக்கு. அங்க போய் கை கழுவிக்குங்க.’ என்றேன் நான்.
‘ரொம்ப தாங்க்ச் மா’ என்றபடி எழுந்து சென்றாள் மாமி.
ஓரு காலி வாடர் பொட்டில் உம் டிச்சு வும் தரைக்கு உணவாவதைத் தடுத்து, சுற்றுச் சூழலைக் காப்பாற்றிய பெருமித்த்தில் என் இருக்கைக்குப் போய் அமர்ந்து கொண்டேன்.
பின்சீட்டில் ஒரு குழந்தை வீறிட்டுக் கொண்டிருந்தது. என் பையில் இருந்த புத்தகத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தேன். பேருந்து கிளம்பியது.
‘ஆங்க், நாந்தான்.. ரொம்ப நன்னா இருந்துதுடீம்மா. காலங்கார்த்தால காபி சாப்டுட்டு கெளம்பினது. வெறும் வயத்துக்கு மரமரக்க பேஷா இருந்துது.’
புத்தகத்தில் மூழ்க ஆரம்பித்திருந்த எனக்கு, எரிச்சலாக வந்தது. அதே சமயத்தில், மறுமுனையில் பேசியது யாராக இருக்கும் என்று யூகிக்கத் தோன்றியது. நிச்சயம் கிரிஜா வாகத்தான் இருக்கும். அவள்தானே டிஃபன் கட்டிக் கொடுத்திருந்தாள்! கிரிஜா யார், மாமியின் இன்னொரு பெண்ணா? தெரியவில்லை.
‘சாப்பாடா, பாத்துக்கறேன். கவலைப்படாதே. வழியில திருவண்ணாமலையில் நிறுத்துவான். அங்கே சாப்டுக்கறேன்.’
இந்த ‘எங்கு போனாலும் கூடவே வரும்’ சமாச்சாரங்களினால் எப்பவும் தொல்லைதான். நாய்க்குட்டியாய் இருந்தால் கூடத் தேவலாம். மொபைல் டவராக இருக்கவே கூடாது. மாமியின் சிக்னல் கட் ஆகிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
‘என்ன, சொல்றது சரியா காதுல விழலை, கட்டாகி கட்டாகி கேக்கறது. சரி அப்புறம் பேசறேன்.’ – மாமி மொபைலை தங்க மாளிகை பர்சில் வைத்து பத்திரப் படுத்திக் கொண்டாள்.
என்னுள் இருந்த அரக்கி வெற்றிச்சிரிப்பு சிரித்துக் கொண்டாள். கொஞ்சம் முன்னாலேயே வேண்டிக் கொண்டிருக்கலாமோ என்னவோ?
திருவண்ணாமலையில் பேருந்து நின்றது. கையில் கட்டிக் கொண்டு வந்திருந்த தயிர் சாதம் அடங்கிய ‘டப்பர்வேர்’ டப்பாவை எடுத்தேன். முன்னிருக்கை மாமி இறங்கிச் சென்றாள். செல்கையில், என் கையில் இருந்த தயிர் சாத்ததை அவள் ஏக்கத்துடன் பார்த்தாற்போல் தோன்றியது. இட்லி கொண்டு வந்த மாமிக்கு தயிர் சாதம் பாக் செய்ய நேரமில்லயோ என்னவோ? அல்லது கிரிஜா கட்டி வைத்திருந்த பொட்டலத்தை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டாரோ?
பேருந்து உறுமியது. மாமி மூச்சிரைக்க வந்து ஏறிக் கொண்டாள்.
சற்று நேரத்திற்குள், மாமி லைவ் அப்டேட்டைத் தொடர்ந்தாள். சிக்னல் மறுபடி கிடைத்துவிட்டது போலும். ‘என்னமோ, வெஜிடபில் பிரியாணி ந்னு குடுத்தான். சகிக்கலை. நெஞ்சைக் கரிச்சுண்டு வர்ரது. நல்ல வேளை எறங்கின எடத்துல இஞ்சி மொரபா வாங்கிண்டேன். ஒன்னு வாயில அடக்கிண்டா சரி ஆயிடும்….. சரி……ம்ம்…..ம்ம்ம்…. வெச்சுடறேன்.’
சற்று முன் சாப்பிட்ட மாங்காய் ஊருகாய்யின் சுவை நாக்கில் இன்னும் இருந்த்து. மாமிக்குக் கொஞ்சம் ஆஃபர் செய்திருக்கலாமோ? கண்ணை மூடிக்கொண்டேன்.
‘ஜிப்மெர், ஜிப்மெர் எல்லாம் எறங்கு’ – நடத்துனர் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். வாரி சுருட்டிக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கினேன். மாமியும் ஜிப்மெர் தான் போலும். எனக்கு முன்னமே இறங்கி விட்டிருந்தாள். லேசாகத் தூறிக் கொண்டிருந்தது.
‘ஏண்டீம்மா, கொழ்ந்த, சித்த இங்க வரியா?’
‘என்ன மாமி’
‘நீயும் இந்திரா நகர் தான் போறியாம்மா?’
‘ஆஅமாம் மாமி’
‘ஒரு ஒத்தாசை செய்யேன். கொஞ்சம் லக்கேஜ் இருக்கு. அதோட மழை பெஞ்சிருக்கு.ஹவாய் செருப்பு வழுக்கி விட்டுடுமோன்னு பயம்மா இருக்கு. கொஞ்சம் ஆத்து வரைக்கும் துணைக்கு வந்துட்டுப் போறியா?’
எனக்கு செல்ல விருப்பமில்லைதான். அதே சமயத்தில் முடியாது என்று சொல்லவும் மனமில்லை. சரியென்றேன். அவ்வழியே போன ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். மாமி என் கையைப் பிடித்துக் கொண்டு மெள்ள, காலை நன்கு ஊன்றி வைத்து நடந்து வந்து ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.
மாமியின் வீடு வந்தது. இறங்கிக் கொண்டோம்.
‘கண்டிப்பா உள்ள வந்து காபி சாப்ப்டுட்டு தான் போணும்’ என்பது மாமியின் நிபந்தனை. உள்ளே நுழைந்தேன். ஒரு சிறிய ஹாலில் போடப்பட்டிருந்த ஒற்றைக் கட்டிலில் ஒரு கிழவர் படுத்துக் கிடந்தார். அவர்தான் மாமாவாக இருக்க வேண்டும். கீழே மூத்திரப் பை தொங்கிக் கொண்டிருந்த்து.
உட்காரு ம்மா என்று சொஃபாவைக் காட்டினாள். உள்ளே சென்றாள். சிரிது நேரத்தில் மணக்க மணக்க காபியுடன் வந்தாள்.
‘இவர் என் ஆத்துக்காரர். ஆல் இண்டியா ரேடியோயில் வேலை பார்த்து ரிட்டயர் ஆனவர். சித்த காலம் முன்னாடி, கை கால் விழுந்து போச்சு. படுத்த படுக்கையாய் ஆயிட்டார். காதும் சரிவர கேக்கறதில்லை. இவரோட எப்பவும் சத்தமாவே பேசிப் பழகினதுல குரல் குறையவே மாட்டேங்கறது. மாமி சிரித்துக் கொண்டாள்.
‘எங்க ஒரே பையன் சந்தோஷ், இங்கே பெக் ல தான் படிச்சான். பேங்களூரில் நல்ல வேலையில் இருக்கான். அங்கேயே குடும்பத்தோட செட்டில் ஆயிட்டான். ஒரே பேரன் – அஷ்வத். ஒரு வயசாறது. மாட்டுப்பொண்ணு கிரிஜா, தங்கமான பொண்ணு. மாமி நான் கேட்காமலேயே குடும்ப விவரங்களை அவிழ்த்துக் கொட்டினாள்.
இவருக்கு பாண்டி தவிர வேற எங்கேயும் பொருந்தலை. பையன் கூப்பிட்டான். ஆனா நாங்க போகலை. எனக்கும் இப்பொ முன்ன மாதிரி எடுத்துப் போட்டுண்டு செய்ய முடியரதில்லை. அதனாலே, ஆத்தோட ஒரு நுர்செ ஏற்பாடு பண்ணிண்டு இருக்கோம். கொஞ்சம் கூடமாட ஒத்தாசையாவும் இருக்கா. சௌரியமா இருக்கு.
ஆனா எனக்குதான் அப்பப்போ பேரன் ஞாபகம் வரும். அப்பொவெல்லாம் அவளைப் பார்த்துக்கச் சொல்லிட்டுக் கெளம்பிடுவேன். பேரனைப் பார்த்தா மனசெல்லாம் நெரைஞ்சுடும். திரும்பி வர பையன் வொல்வொ டிக்கெட் போட்டுக் கொடுப்பான். இவருக்கோ நான் திரும்பி வரதுக்குள்ள இருப்பே கொள்ளாது. பத்து தடவை ஃபோன் பண்ணிடுவார். மாமி வெள்ளந்தியாக்ச் சிரித்தாள். எனக்கு என்னவொ போல் இருந்த்து.
மாமி என்னை பற்றி ஒன்றும் கேட்கவில்லை. விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன். மனது பாரமாக இருந்தது. அந்த வெகுளியை ராட்சசியாக்க் கற்பனை செய்த்தற்காக என்னை நானே கடிந்து கொண்டேன்.

Thursday, February 21, 2013

Oru paappa paadal

Today, I composed a set of tamil rhymes. I liked this personally, so thought of putting it up here.


குழந்தைகளே வாருங்கள் 
காய்கறி கதை ேகளுங்கள்!

அழகு மிக்க ெசடியிலே
கத்தரிக்காய் ஓண்ணு இருந்திச்சாம்;
கத்தரி பக்கத்தில் தக்காளியும்
புதுசா காய்ச்சு தொங்கிச்சாம் !

பக்கத்து வீட்டு ெவங்காயமும் 
பின்  வீட்டு பட்டாணியும்   
தக்காளி ைபயனை பார்க்கவே
தாவி தாவி வந்துச்சாம்

காரட், கோசு, பூசணிக்காய்
ெவள்ளரி, முள்ளங்கி, குடைமிளகாய்,
உருளை கிழங்கு காலிப்லவேர் ஐயும்
கூட கூட்டிட்டு வந்திடுச்சாம்

எல்லா காயும் வந்தவுடன்
கத்தரிக்காய்  குஷியாச்சாம்
தக்காளி காய்ச்சதை கொண்டாட
விருந்து ெசய்து கொடுத்திச்சாம் - கத்திரிக்காய்
விருந்து ெசய்து கொடுத்திச்சாம்!

Pudhidhu.....

புதிது! 

புத்தம் புது மழை;
புத்தம் புது உயிர்;
புத்தம் புது உறவு;
புத்தம் புது உடை;
புத்தம் புது பேனா;
புத்தம் புது கைப்பை;


தந்திடும் ஆனந்தத்தை விட 
இவையெல்லாம் தந்திடுமோ என்று எண்ண வைக்கும் 
புத்தம் புது ஆண்டு 
எனக்கு மெத்தப் பிடிக்கும்.



பிறந்த நாள்


சிறு வயதில் என் பிறந்த நாள் எனக்குப் பிடித்ததில்லை;

வண்ண உடை சூடி வலம் வரும் நேரத்தில்
வெள்ளையுடை சூடி வலம் இடமிட்டு வருவேன்!
சுதந்திர தினத்தன்று பிறந்து வைத்ததால்
சிற்சில சலுகைகள் பறிபோனதாய் உணர்வேன்!

பக்கத்து பெட்டிக்கடையில் சாக்கலெட்டுகள் வாங்கி
பெட்டியில் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போனால்
பரேடு முடிந்தவுடன் பிடி மிட்டாயை என
பாராமலே பிள்ளைகளை விரட்டி விடுவார்கள்!

வருடம் சில கழிந்து வயதும் வளர்ந்தபின்
வாங்கி வந்த வரத்தை எண்ணி மகிழ்ந்து கொண்டேன்!
நாடு முழுதும் கொண்டாடும் நாளன்று பிறந்ததை
நினைத்து என் அன்னைக்கு நன்றி சொன்னேன்!

Wednesday, February 20, 2013

Minsaarak kambin mel ottrai kaagam

This was composed on 13th May 2001. My brother challenged me to write on a totally random topic, and presented this one! And I decided to take a stab at it....

மின்சாரக் கம்பின் மேல் ஒற்றைக் காகம்......

மின்சாரக் கம்பின் மேலே கருநிறக் காகம் ஒன்று
இரைந்து இரைந்து ஏனோ கரைந்து கொண்டிருக்க
இதைப் பார்த்த நானும் சற்றே வியந்து
அது கரைதற்குரிய காரணத்தைக் கற்பனை செய்தேன்!

இரையொன்று இசைந்தே வந்து அலகினில் சிக்க
அலட்சியத்தால் காக்கையும் அதைத் தவற விட
தன்னைத் தானே மிகச் சினந்தே தான்
தொண்டை வற்ற இவ்வாறு கத்துகிறதோ?

இணையோன்றை ஆசையுடன் அழைத்தே நிற்க
அதற்கோ இதனை அறவே பிடிக்காமல்
தன் காழ்ப்பை கடைக்கண்ணால் காட்டியமையால்
காகமும் கலங்கியே கண்ணீர் விடுதோ?

கருமை கொஞ்சம் கூடுதலாய்க் கொண்ட அக்காகம்
தன் நிறங்குன்றிய நிலையை எண்ணி நீர் சிந்தியதோ?

என்றோ மாண்ட தன் நண்பனை நினைத்து
நெஞ்சில் ஈரமிக்க காகம் நீர் வடிக்கிறதோ?

நித்திலத்தின் நிலையாமையை எண்ணி வருந்தியே
காகமும் தன்னைத்தானே நொந்து கொள்ளுதோ?




Tuesday, February 19, 2013

Azhugai

அழுகை


பிறந்த நாள் முதலாக
இறக்கும் நாள் வரை;

கண்களில் ஆரம்பித்தது முதல்
கன்னங்களில் வழியும் வரை;

ஜனன ஒலியாக ஆரம்பித்து
மரண ஒலியாக முடியும் வரை;

உணர்ச்சிகள் துளிர்த்த நாள் முதல்
நினைவுகள் மங்கும் நாள் வரை;

பழகத் தெரிந்த நாள் முதல்
பிரிய நேரிட்ட நாள் வரை;

பசிக்கு அழுத நாள் முதல்
பிணியுடன் போரிட்ட நாள் வரை;

தன்மானம் வளர ஆரம்பித்த நாள் முதல்
சுய கெளரவம் தடுக்க ஆரம்பித்த நாள் வரை;

உணர்ச்சிகளின் வடிகாலாக,
துன்பத்தின் வடிகாலாக,
ஆனந்தத்தின் வடிகாலாக,

அவ்வப்போது ஜனிப்பது அழுகை!

Poo....

பூ ....

பூ என்றதும் என் மனதில் மண்வாசனை இன்று;
முதன் முதலில் நான் நட்ட நந்தியாவட்டை கன்று;
அதில் மெல்ல மொட்டு விட்ட முதல் அரும்பு;
மொட்டு வெடித்த மலரின் முகத்தில் மழலையின் குறும்பு!

ரோஜா அவள் என் பூக்களின் அரசி;
பத்து வண்ண வகைகளின் செவி உரசி
குசலம் விசாரித்துப் பின் கதை பேசி
பூக்க வக்கில்லையா என்று சிற்சமயம் ஏசிப்
பலநாள் பேசாதிருந்தால் வாசம், துளைக்கும் நாசி! 

அம்மா தரும் கைக்காசில் மிச்சம் பிடித்து;
உண்டியல் உடைத்து போதாவிட்டால் உண்டி உடைத்து;
சிறுகச்சிறுக சிக்கனம் செய்து சேமித்து
'நர்சரி' சென்று வாங்கி வருவேன் செடி நாத்து!

செம்மண் கொணர்ந்து தொழுவுரம் கலந்து;
குளிர் நீர் தெளித்து அம்மண் பிசைந்து;
'தாய்' மண்ணுடன் என் பிள்ளையை எடுத்து
தொட்டியில் இறக்கியபின் கிடப்பேன் காத்து!

சில நாட்களில் வளர்ந்து விடும் அந்த நாத்து
போக வர சிரிக்கும் என்னைப் பார்த்து!
பரவசத்தை பெருக்கித் தரும் அதன் வித்து
இன்றும் சிலிர்க்கிறேன் என் பிஞ்சுப் பிள்ளைகளை நினைத்து! 



Monday, February 18, 2013

Vaayillaa Jeevan - வாயில்லா ஜீவன்



ஆரஞ்சு பட்டையுடன் கூடிய அசட்டு நீலத்தில் குளித்திருந்தது அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு. அந்தக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் தான் வித்யா குடியிருந்தாள். கணவன் வெங்கட், பையன் ப்ரணவ், மாமனார், மாமியார், நாய்க்குட்டி என கச்சிதமான(?) குடும்பம். வேறு எந்த பிக்கல் பிடுங்கல்களும் இல்லை. எந்தப் பிரச்சனையும் இல்லையெனில் இந்த கதை எதைப் பற்றி?

முதல் பத்தியில் சொன்ன நாய்க்குட்டியைப் பற்றி. அய்யோ, அந்த நாய்க்குட்டியைப் பிரச்சனை என்று சொன்னால் வித்யா பத்ரகாளியாகி விடுவாள். அவ்வளவு செல்லம் அது. மன்னிக்கவும், அது இல்லை, அவன். அவன் பேர் கிட்டு. என்னதான் கிட்டு இந்த வீட்டு தத்துப் பிள்ளையாய் இருந்தாலும் அவன் பூர்வீகம் சென்னையின் ஒரு முட்டு சந்துதான். ஆம், கிட்டு ஒரு நாட்டு நாய்க்குட்டி. நாய் பிடிக்காதவர்கள் தெரு நாய் அல்லது சொறி நாய் என்றும் விளிப்பதுண்டு. உண்மையில் கிட்டு துடைத்து விட்டது போல் ஒரு சுத்தம். ஒரு உண்ணியோ சொறியோ கிடையாது.

கிட்டு தெருவிலிருந்து பிரமோஷன் வாங்கி இந்த குடியிருப்புக்கு வந்தது ஒரு தனி கதை. ஒரு முறை பாட்டி வீட்டிற்கு சென்ற ப்ரணவ் க்ரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கையில், இந்த அழகிய பிரவுன் வெள்ளைக் குட்டி குறுக்கே ஓட, பந்து அதன் மேல் பட்டு, குட்டி வீல் வீல் என்று கத்த, ப்ரணவ் அதை ப்ளூ க்ராசுக்குத் தூக்கிக் கொண்டு ஓட, மீதிக் கதையை ஊகிப்பது வெகு சுலபம்.

எப்படியோ குட்டி, ஓட்டைகள் போட்ட பெட்டியில் பெங்களூர் வரை வந்தாகி விட்டது. வித்யா, அவள் கணவன் இருவருக்கும் நாய் என்றால் கொள்ளைப் பிரியம். அதுவும் க்யூபா, கீபா என்று போய் வந்து, வளர்த்தால் இந்தய நாய் தான் வளர்க்க வேண்டும் என்ற கொள்கை வேறு. மாமனார் மாமியாரும் முன்பு நாய் வளர்த்தவர்கள்தாம். எனவே ஏதும் பிரச்சனை இருக்காது என்று நினைத்த வித்யாவின் தலையில் முதல் இடி இறங்கியது.

எங்க சிண்டுவைப் பார்த்த இடத்தில கண்ட நாயையும் வெச்சு பாக்க ஒரு போதும் முடியாது’ – இது மாமனாரின் வாதம்.

என்னம்மா இது, தெரு நாய் போல இருக்கே. என்னதான் குளிப்பாட்டி நடுவீட்டில வெச்சாலும்….’ – இது மாமியார்.

என்ன செய்யறதும்மா, ப்ரணவ் ஆசைப்பட்டுட்டான், இப்ப என்ன விரட்ட முடியுமா? நீங்களே சொல்லுங்க?’ – இது அப்பாவி முகமூடி அணிந்த வித்யா.

அதெல்லாம் முடியாது, அந்த கழிசடைக் கிட்டுவ வெளிய தள்ளிடு, ஈசியா பொழச்சுக்கும், தெருத்தம்பிதானே அதுஎன்று மாமனார் அபிப்பிராயப்பட, அப்போது தீவிரமாய் நாய்க்கு பேர் யோசித்துக் கொண்டிருந்த ப்ரணவ், தாத்தாவின் வாய் தவறி விழுந்தகிட்டுவைப் பிடித்துக் கொண்டான்.
ஹை, தாங்க்ஸ் தாத்தா, இன்னியில இருந்து இவன் பேர் கிட்டு. கம் ஆன் கிட்டு! லெட்ஸ் ப்ளே!’ என்று குதித்தான் ப்ரணவ்.

நைஸ் நேம்!’ – இது வெங்கட். வித்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
நாமகரணம் செய்த கையுடன் பக்கத்துத் தெருவில் இருந்த கால்நடை மருத்துவர் வீட்டிற்கும் சென்று வந்தாகி விட்டது. ப்ரணவுக்குக் கூட இவ்வளவு ஊசி போட்டிருப்போமா என்று வித்யாவுக்கு சந்தேகம் வரும் படி, அவ்வளவு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டது கிட்டு. மைக்ரோ சிப் கூட பொருத்திக் கொண்டது. ‘நியூடர்அதாவது கருத்தடை செய்ய வேண்டும் என்று வெட்சொன்னார். ‘அடச்சே, அது மஹா பாவம், வாயில்லா ஜீவன், அது சந்ததியே அழிஞ்சு போயிடும்என்ற மாமியாரின் கருத்துக்கு அதிசயமாக வித்யாவும் தலையாட்டினாள். கிட்டு தப்பித்தது.

கிட்டு வந்த புதிதில் கொஞ்சம் அடங்காப்பிடாரியாகத்தான் இருந்தது. இந்த பிரச்சனை வீட்டோடு நின்றிருந்தால் தேவலாம். குடியிருப்பவர் சந்திப்பு வரை வந்துவிட்டது. அந்த காலத்தில் அஞ்சலிப் பாப்பாவிற்கு வந்த நிலைமை இப்போது கிட்டுவிற்கு.

உங்க நாய் நைட்ல குரைக்குது.” – கிரவுண்ட் ஃப்லோர் ஆசாமி.

ஏதோ பிராண்டுற மாதிரி சவுண்ட் கேக்குது” – வித்யா வீட்டிற்கு கீழே குடியிருப்பவர்.

இதெல்லாம் சகஜம்தான் என்று வித்யா எண்ணினாலும், அடுத்து வந்த குற்றச்சாட்டு அக்கிரமம்.

எங்க நாய் வாகிங் போகும் போது உங்க நாய் பயமுறுத்துது”. வோடஃபோன் விளம்பரத்தைப் பார்த்து அந்த மூக்கு சூம்பிப் போன நாயை வாங்கியிருந்தனர் அந்த வீட்டினர். அது பெண் நாய் வேறு. வேற்று கிரகத்தில் இருந்து இறக்குமதி போல் இருந்த அதைக் கண்டால் எந்த கவுரவமான ஆண் நாய்க்குதான் ஆசையாய் இருக்காது? இயற்கையின் விதியடா அது! வித்யாவும் வெங்கட்டும் மனதிற்குள் திட்டினாலும், ‘சரி, எங்க நாய ஒழுங்கா ட்ரைன் பண்றோம்என்றுதான் சொல்ல முடிந்தது.

கிட்டுவிற்கு ரோஷமாகி விட்டதோ என்னவோ, வெகு சில நாட்களிலேயே சமத்தாகி விட்டது. எல்லா அபார்ட்மென்ட் நாய்களையும் போல, பால்கனியில் காலைக் கடன்களைச் செய்யக் கற்றுக் கொண்டு விட்டது. முதலில் குடியிருப்பில்பின் ட்ராப் சைலன்ஸ்இருக்க வேண்டும் என்று விழைந்த அது, தன் எதிர்பார்ப்பை மாற்றிக் கொண்டு வித்யா வீட்டுக் கதவு தட்டப்படும் போது மட்டும் குரைத்தது, வித்யா வீட்டை மட்டும் காவல் காத்தது. கீழ் வீட்டு சப்பை மூக்கியைப் பற்றிக் கூட அவ்வளவாக நினைப்பதில்லை. தினசரி நடை, பெடிக்ரீ சாப்பாடு, அவ்வப்போது சொஷியலைசிங்குக்கு நாய்கள் கிளப், நாயுள்ள நண்பர்களின் வீடுகள் என ராஜ போக வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டது கிட்டு.  

ஒரு நாள் காலை, தொலைபேசி அலறியது. வெங்கட் எடுத்து ஸ்பீக்கரில் போட்டான். மறுமுனையில் பேசியவர் வெங்கட்டின் கல்லூரி நண்பர்.

ஹை ஸ்ரீதர், சொல்லு! என்ன இவ்ளோ எர்லீயா ஃபோன் பண்றே? என்ன விஷயம்?”

அது வந்து.. எப்டி சொல்றதுன்னே தெரியலடா

என்னடா, எனி ஃபேமிலி ப்ராப்ளம்? ஹௌ கேன் ஹெல்ப்?”

ஹ்ம்ம், அதுஎங்க டெய்சி கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி இருந்திச்சு. சுருண்டு சுருண்டு படுத்துக்கிட்டு, சரியா சாப்பிடாம. நேத்து அதோட இடத்துக்குப் போய் பாத்தா, மூணு குட்டி!”

வாவ், தட்ஸ் சர்ப்ரைஸ்! அதுவும் டெய்சி அழகா புசுபுசுன்னு இருக்குமே!”

அதாண்டா அது ப்ரெக்னன்ட் ஆன விஷயமே எங்களுக்குத் தெரியாம போச்சு. இதுல விஷயம் என்னன்னா, அதுல ரெண்டு குட்டி, அச்சு அசல் கிட்டு மாதிரியே இருக்கு. ஸோ, இது நம்ம ஃபாமிலி மாட்டெர்.”

வெங்கட்டுக்கு லேசாகத் தலை சுற்றுவது போல் இருந்தது. அருகில் உட்கார்ந்திருந்த வித்யாவைக் கலவரமாய்ப் பார்த்தான். அவளோ மடியில் படுத்திருந்த கிட்டுவைப் பார்க்க, அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் கையை நக்கியது கிட்டு.